தமிழகத்தில் “ஜாகுவார் லேண்ட் ரோவர்” கார் தயாரிக்கும் ஆலை|| “25000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் தொழில் நிறுவனங்கள், தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தனது ஆலைகளை அமைத்து வருகிறது. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, கார் தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்கிறது. அதன் முழு விவரங்களை கீழே காண்போம்.
FD-ல் வெறும் 333 நாள் முதலீட்டுக்கு 8.15% வட்டியா||அசத்தலான திட்டம்..!! முழு தகவலுடன்..!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடி முதலீட்டில், 400 ஏக்கரில் “ஜாகுவார் லேண்ட் ரோவர்” கார் தயாரிக்கும் ஆலையை அமைக்கிறது மற்றும் அதே பகுதியில் ரூ.400 கோடி முதலீட்டில் அமைய உள்ள காலணி தொழிற்சாலை பூங்காவிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதியன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும், இவ்விரண்டு தொழிற்சாலைகளின் மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளார்.



























