யூனியன் வங்கியில் 606 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.89,890/- மாத ஊதியம்!  

0
யூனியன் வங்கியில் 606 காலியிடங்கள் - டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.89,890/- மாத ஊதியம்!  
Union Bank of India வங்கியில் Specialist Officer பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று (03.02.2024) முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Union Bank of India
பணியின் பெயர் Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager
பணியிடங்கள் 606
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

யூனியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Union Bank of India வங்கியில் Specialist Officer பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 606 காலியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Chief Manager – 05 பணியிடங்கள்

Senior Manager – 42 பணியிடங்கள்

Manager – 451 பணியிடங்கள்

Assistant Manager – 108 பணியிடங்கள்

Specialist Officer கல்வி தகுதி:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, M.Tech, M.Sc, Graduate Degree, CA, CMA, CS தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.

Specialist Officer வயது வரம்பு:

Chief Manager பணிக்கு 30 வயது முதல் 45 வயது வரை என்றும்,

Senior Manager பணிக்கு 25 / 28 வயது முதல் 35 / 38 வயது வரை என்றும்,

Manager பணிக்கு 25 வயது முதல் 35 வயது வரை என்றும்,

Assistant Manager பணிக்கு 20 வயது முதல் 30 வயது வரை என்றும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Specialist Officer ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.36,000/- முதல் ரூ.89,890/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

யூனியன் வங்கி தேர்வு முறை:

இந்த யூனியன் வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Online Examination, Group Discussion, Screening, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் வங்கி விண்ணப்ப கட்டணம்:

Gen / EWS / OBC – ரூ.850/-

SC / ST / PwBD – ரூ.175/-

யூனியன் வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 03.02.2024 அன்று முதல் 23.02.2024 அன்று வரை https://ibpsonline.ibps.in/ubisojan24/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!