
மார்பக புற்றுநோய்யை தாமதப்படுத்தும் புதிய மருந்து.. அமெரிக்கா மருத்துவ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
கடந்த ஆண்டு அஸ்ட்ராஜெனெ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய மருந்தான கேபிவாசெர்டிப்பை, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு பயன்படுத்த தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனமான (NICE) ஒப்புதல் அளித்தது. இது பிரிட்டனில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பெரிய திருப்புமுனை மாறியது. இந்த மருந்து HR பாசிட்டிவ், HER2 நெகட்டிவ் உட்பட மார்பகப் புற்றுநோயால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் 1,000-திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!
அதாவது, “கேபிவாசெர்டிப் மருந்தை தொடர்ந்து தற்போது மார்பக புற்றுநோய் பரவலை ஆறு மாதங்களுக்கு தாமதப்படுத்தும் புதிய மருந்தான அஸ்ட்ராஜெனகாவின் கேமிசெஸ்ட்ரான்ட் என்ற மாத்திரை நல்ல பலன் அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது”. மேலும், இதன் மூலம் நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்க அல்லது நிறுத்தி நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்க முடியும் என்றும், கீமோதெரபியின் தேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய பக்க விளைவுகளை தாமதப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

























