ஜூலை 1 முதல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு Ph.D கட்டாயம் – யுஜிசி உத்தரவு!!

1
ஜூலை 1 முதல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு Ph.D கட்டாயம் - யுஜிசி உத்தரவு!!
ஜூலை 1 முதல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு Ph.D கட்டாயம் - யுஜிசி உத்தரவு!!
ஜூலை 1 முதல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு Ph.D கட்டாயம் – யுஜிசி உத்தரவு!!

பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளின்படி ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் Ph.D படித்தவர்கள் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்ற முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவிப்பு:

யுஜிசி சார்பில் வெளியிடப்பட்ட 2018 புதிய நெறிமுறைகள் குறித்த ஆணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது அதன்படி ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கட்டாயம் Ph.D படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

இது குறித்து கௌரவ விரிவுரையாளர்கள் கூறுகையில் “யுஜிசி மாதம் ரூ.50,000 வழங்க வேண்டிய பணிகளுக்கு ரூ.15,000 வழங்கிவருகிறது. அதை கண்டும் காணாமல் இருக்கும் உயர்கல்வித்துறை, தற்போது உதவி பேராசிரியர்களின் தகுதியை நிர்ணயிப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.” என குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து உயர்கல்வித்துறை கூறுகையில், “வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் ஆய்வு துறைகளிலும், நாட்டின் மேம்பாட்டு துறையிலும் பின்தங்கிய நிலை உள்ளது. இதற்கு நாட்டின் பொருளாதாரம் மட்டும் இல்லாமல் உயர்கல்வித்துறையில் உள்ள கோளாறுகளும் காரணம். ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் அதிக ஆண்டுகள் ஆய்வுகள் படிப்பிற்கு நேரம் செலவழிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை – முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!!

அவர்கள் பட்டப்படிப்பு முடிந்து நேரடியாக வேலைவாய்ப்பை தேடி செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளனர். அவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித்தொகையும் அரசு வழங்குவதில்லை. யுஜிசி சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் சிலர் ஆய்வு படிப்புகளில் தேசிய அல்லது மாநில அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வழங்கப்படுகிறது.

இதனால் இந்த தேர்வுகளை எழுத ஏழை எளிய மாணவர்களால் இயலாத சூழ்நிலை உள்ளது. குறிப்பாக உயர்கல்வி பயில ஆர்வம் உள்ள பெண்கள் நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறாக இருக்கும் சூழ்நிலையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதால் இவர்களின் பணிவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த திட்டம் குறித்து உயர்கல்வித்துறை சிந்திக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Backward class women struggle to learn till post-graduation.in developing country like India concession should be given for women and this rule should’ve relaxed otherwise women who work for their family will be starving.Education minister has to kindly reconsider the PhD Norm for women and also clarify the stand for lecturers already having 10 years of collegiate experience without passing ugc or having PhD. Please extend the time frame by another three years.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!