தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

1
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

பிப்ரவரி 18 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு இல்லை – அண்ணா பல்கலை விளக்கம்!!

இதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து கேட்கப்படும். பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த தமிழக அரசு அனுமதி – அரசாணை வெளியீடு!!

ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு 5 நாட்களில் 3 மாணவர்களுக்கும், ஆசிரியர்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!