தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை – முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!!
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு பொதுத்துறை முதன்மை செயலாளர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து அரசு அலுவலக ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய துறை பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அரசு பணிகள் கிடப்பில் இருந்ததால் மே மாதம் 3ம் தேதி முதல் 33% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.
பின்னர் கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததை தொடர்ந்து மே 18ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் 50% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிடப்பட்டது. இதில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து 100% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. அரசு ஊழியர்கள் பனியின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாது பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பணிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுத்துறை முதன்மை செயலாளர் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனைத்து துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் பணி செய்யும் இடத்திலும், அரசு அலுவலகங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த தமிழக அரசு அனுமதி – அரசாணை வெளியீடு!!
அதுமட்டுமின்றி முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாத பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களை அரசு அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்