தெற்கு ரயில்வே வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – ரயில்கள் ரத்து!

0

தெற்கு ரயில்வே வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – ரயில்கள் ரத்து!

தெற்கு ரயில்வே வாரியம் ஆனது பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

தெற்கு ரயில்வே வாரியம் ஆனது சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட பயணிகளுக்கு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் காசிப்பேட் – விஜயவாடா மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறிப்பிட்ட தினங்களுக்கு சேலம் வழியாக செல்லும் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மதுபான கடைகள் மூடல் – தேர்தல் எதிரொலி!

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ஏப்ரல் 30, மே 7, 14, 21 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் – நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், வரும் மே 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் நிஜாமுதீன் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், வரும் 27, மே 4, 18 ஆகிய தேதிகளில் எா்ணாகுளம் – நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், வரும் 30, மே 7, 21 ஆகிய தேதிகளில் நிஜாமுதீன் – எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும், 29, மே 6, 20 ஆகிய தேதிகளில் இந்தூா் – கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், வரும் 27, மே 4, 18 ஆகிய தேதிகளில் கொச்சுவேலி – இந்தூா் எக்ஸ்பிரஸ், வரும் மே 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளில் கோா்பா – கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், மற்றும் இந்த ரயிலின் மறு மார்க்கத்தில் வரும் ரயில்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!