தஞ்சை, சேலத்தில் புதிய ஐடி பார்க் – 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!

0
தஞ்சை, சேலத்தில் புதிய ஐடி பார்க் - 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!

தமிழக அமைச்சர் உதயநிதி தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்படும் ஐடி பார்க் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு உறுதி:

தமிழக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் பிப். 19ம் தேதி தமிழக பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி பார்க், டைட்டில் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவற்றை கட்டுவதற்கும் பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படி, திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பில் 6.3 லட்சம் சதுரடி பரப்பளவில் ஒரு டைடல் பார்க் மற்றும் ரூ.120 கோடி மத்தியில் சிப்காட் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்கள் விவரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும் மதுரை, சென்னை, கோவை போன்ற 10 இடங்களில் புதிதாக ஐடி பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் டைட்டில் பார்க் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஒரே நாளில் முதல்வர் நடத்தினர். இவ்வாறு புதிதாக கட்டப்படும் தகவல் தொழில் நுட்ப கட்டிடங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 13,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!