ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்கள் விவரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்கள் விவரம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் ரூபாய் 1000 பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களின் விவரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகை:

தமிழக அரசு 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ரூபாய் 1000 பொங்கல் பரிசு தொகையுடன் ஒரு முழு கரும்பும், இலவச வேட்டி சேலையும் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வழங்கப்பட்டு பொங்கலுக்கு முன்னர் மற்றும் பொங்கலுக்கு பின்னர் பரிசுத்தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டது. ஆனால் டோக்கன் வழங்கப்பட்ட குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடை மூடப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு கோடி பேருக்கு மேல் பரிசு தொகை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!