
இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!! எப்போன்னு தெரியுமா…?? இதோ உங்களுக்காக
பள்ளி மாணவர்கள் மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே, தங்களுக்கு எப்பொழுது விடுமுறை வரும் என்பதை காலண்டரில் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அதன்படி, தற்போதைய ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, அரசு விடுமுறைகள் அதிகமாகவே உள்ளன. இதற்கிடையே, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. அந்தவகையில், தற்போது தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மணிப்பூரில் ஏற்பட்ட முக்கிய அரசியல் மாற்றம்.. மக்களவையில் எடுக்கப்பட்ட சிறப்பு தீர்மானம்..!!
அதாவது, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழாவும், வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

























