பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சென்னைக்கு திரும்பும் மக்கள்… போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கும் நெடுஞ்சாலைகள்..!!

0
??????? ???????? ??????? ???????? ?????????? ?????????? ??????... ???????????? ????????? ???????????? ?????????????..!!
பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சென்னைக்கு திரும்பும் மக்கள்... போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கும் நெடுஞ்சாலைகள்..!!

பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சென்னைக்கு திரும்பும் மக்கள்… போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கும் நெடுஞ்சாலைகள்..!!

 

பொங்கல் பண்டிகையையொட்டி விடுக்கப்பட்ட ஒரு வார விடுமுறை நிறைவடைந்த நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் திரும்பி வந்த வண்ணம் இருக்கும் நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  சென்னை மற்றும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் மாற்றுப்பாதைகளில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

அதாவது, பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் “திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்” கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், படையெடுத்து வரும் வாகனங்கள் கிட்டத்தட்ட 1-கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கனரக வாகனங்கள் “செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னையை அடையும் படி போக்குவரத்து மாற்றம்” செய்யப்பட்டுள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!