ஊழியர்களின் வெகுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா 8வது ஊதிய குழு..?? மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் தொழிற்சங்கங்கள்..!!

0
??????????? ???????? ??????????? ???????????? 8??? ???? ????..?? ??????? ??????????????????? ?????????????? ???????????????..!!
ஊழியர்களின் வெகுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா 8வது ஊதிய குழு..?? மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் தொழிற்சங்கங்கள்..!!

ஊழியர்களின் வெகுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா 8வது ஊதிய குழு..?? மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் தொழிற்சங்கங்கள்..!!

 

ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பிடுவதற்கும் திருத்துவதற்கும் மத்திய அரசு வழக்கமாக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை புதிய சம்பளக் குழுவை அமைக்கிறது. ஒவ்வொரு ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் பல பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களின் சம்பளம் ஆனது உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 வது சம்பளக் குழுவின் மூலம் அமல்படுத்தப்படவுள்ள பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மாற்றப்பட்ட ஓய்வூதியம் என்பது ஓய்வூதியத் திட்டத்திலிருந்து தவணைகளில் பணம் பெறுவதற்கு பதிலாக, ஒரே நேரத்தில் ஒரு மொத்தத் தொகையாக பெறுவதற்கான வசதியாகும். இத்திட்டத்தின் படி “ஓய்வூதிய மறுசீரமைப்பு காலம் 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும், கோவிட்-19 காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) வெளியிடப்பட வேண்டும் என்றும், கருணை அடிப்படையில் நியமனங்கள் செய்வதற்கான வரம்பு நீக்கப்பட வேண்டும் மற்றும் காலியாக உள்ள பதவிகளை விரைவாக நிரப்ப வேண்டும் போன்ற செயல்முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன”. இதை தொடர்ந்து, தொழிற்சங்கங்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பெரிய அளவிலான போராட்டங்கள் ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!