பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்…17 மணி நேர பயணத்திற்கு பின் வெற்றிகரமாக தரையிறங்கிய ட்ராகன் விண்கலம்

0
???????? ???????????? ?????? ???????????...17 ??? ??? ??????????? ???? ??????????? ??????????? ??????? ????????
பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்...17 மணி நேர பயணத்திற்கு பின் வெற்றிகரமாக தரையிறங்கிய ட்ராகன் விண்கலம்

பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்…17 மணி நேர பயணத்திற்கு பின் வெற்றிகரமாக தரையிறங்கிய ட்ராகன் விண்கலம்

 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காக சென்று, கடந்த 9 மாதங்களாக அங்கேயே இந்திய – அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும்  சிக்கி தவித்தனர். இந்நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்கு அழைத்துவர அமெரிக்கா அரசு புதிய முயற்சிகளை  மேற்கொண்டது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை 4.33 மணிக்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இந்த ட்ராகன் விண்கலத்தில் அவர்களை மீட்க, ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சென்று இருந்தனர். மேலும், இந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதையடுத்து, மீண்டும்,17 மணி நேர பயணத்துக்கு பிறகு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. மேலும், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!