விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல், சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" முதல், சன் டிவி "ரோஜா" சீரியல் வரை - டாப் கமெண்ட்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல், சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்கள்!

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்கள் ஒளிபரப்பி வரும் நிலையில் மக்களுக்கு பிடித்தமான ஒருசில சீரியல்கள் உள்ளன. அந்த சீரியல்களில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பது குறித்து ப்ரோமோ வெளியான நிலையில், அதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கமெண்ட் செய்து வருகின்றனர்.

டாப் கமெண்ட்ஸ்:

வெள்ளி திரை படங்களை போல சின்ன திரை சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு புதிய சீரியல்களையும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களையும் கொண்டு வந்துள்ளனர். அந்தந்த சீரியல் எபிசோட்களை விட தினமும் நடைபெற உள்ள டிவிஸ்ட்கள் குறித்த ப்ரோமோ தான் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்களும் காமெடி கலந்தது போல உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் வேலைக்கு சேர்ந்த பின்னால் வேலை பார்க்க தெரியாமல் போற வழியில் பொருள்களை கீழே போட்டு செல்கிறார். அதை பார்த்த கதிர் பின் தொடர்ந்து வந்து பொருள்களை கட்டி வைக்கிறார். இது குறித்த ப்ரோமா வெளியான நிலையில் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கதிர் எப்போமே கண்ணன விட்டுக்கொடுக்கமாட்டான் என கமெண்ட் செய்துள்ளனர்.

சிம்புவின் “மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதல்!

மற்றொரு ரசிகர் கல்யாணத்துக்கு அப்புறமாவது கண்ணனுக்கு பொறுப்பு வரும்னு பார்த்த இப்படி இருக்கானே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பார்ட் டைம் ஜாப் பார்த்துக்கிட்டே படி கண்ணா வீட்ல சீக்கிரமா சேர்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மை தெரிந்த கண்ணம்மா அடுத்து துளசியிடம் தான் கேட்பார் என சௌந்தர்யா அவரிடம் பேசிக் கொண்டிருக்க அதை பாரதி பார்த்துவிடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சௌந்தர்யாவை திட்டுகின்றனர். கண்ணம்மா குழந்தைதானே அவளுக்கு உண்மை தெரிந்தால் என்ன என்று பலரும் கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் போச்சிடா இந்த இதை பாரதி வேற பார்த்துவிட்டானா இனி வீட்ல ரணகளம்தான என்று பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், இனியா பாக்கியாவை புகழ்ந்து தனது அப்பாவிடம் பேசுகிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள், ஸ்கூலுக்கு போகும் பாக்யாவை கண்டபடி திட்டிட்டு இப்போ பரிசு வாங்குன உடனே பாசமா பேசுறியே இனியா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரவயில்லையே கோபி முகத்தில் புன்னகை தெரியுது என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், சந்தியாவை விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து போட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்லுபடி ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்குள்ள எப்போதான் சண்டை இல்லாம இருக்கும் என்று கேட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கடைசி புகைப்படம் எடுத்த ஐஸ்வர்யா – கவலையில் ரசிகர்கள்!

ஆயிரம் சீரியலை பாத்துருக்கேன் இந்த மாதிரி எப்போமே அழுகாட்சியான சீரியலை இதுவரைக்கும் பார்க்கவே இல்லை என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். நீங்க சண்ட போட்டி இருக்கரவங்களையும் கடுப்பாக்குறீங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியலில் செண்பகம் தான் தன்னுடைய அம்மா என்பதை நிரூபிக்க ரோஜா பரிகாரம் செய்ய இருக்கிறார். இது 1 மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க என்ன பண்ணாலும டைரக்டர் அனுவுக்கு சாதகமாத்தான முடிப்பாரு என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ஒரு ரசிகர் செண்பகம் அர்ஜூன் வீட்டுக்கு வந்தா பிரியா கதை முடிஞ்சிடும் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் முடிஞ்சா ரொம்ப சந்தோஷம் என்று கூறியுள்ளார். அட போங்கய்யா.. நீங்களும் உங்க கதையும்..என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியும் செண்பகம் அம்மாவை பார்க்க போது இல்ல அப்புறம் எதுக்கு வீண் விளம்பரம் என கேட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!