சிம்புவின் “மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதல்!

0
சிம்புவின்
சிம்புவின் "மாநாடு" திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் - அண்ணாத்த உடன் மோதல்!
சிம்புவின் “மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. தமிழ் திரைப்படங்கள் பல தீபாவளி பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் வெளியிடப்படும் நிலையில், வருகிற தீபாவளிக்கு மாநாடு படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு படம்:

தமிழ் திரைப்படங்கள் பல பண்டிகை தினங்களில் வெளியிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளிக்கு திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. அதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரிசையில் படங்கள் வெளியாக உள்ளன. தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படம் ரிலீசாக உள்ளது. அதே போல அஜித்தின் வலிமை படமும் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. அந்த வரிசையில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கடைசி புகைப்படம் எடுத்த ஐஸ்வர்யா – கவலையில் ரசிகர்கள்!

இந்த நிலையில் சிம்புவின் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்துள்ளார்.

விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமான கல்யாணி நடிக்கிறார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் என பலர் நடிக்கின்றனர். அண்மையில் ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!