விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி – நிஷா ஜோடி, விஜய் பாடலை எடுத்ததற்கான காரணத்தை உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மனதில் தனி இடம் உண்டு. சூப்பர் சிங்கர், பிக்பாஸ், ஜோடி நம்பர் 1, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத் ஷரீக், நிஷா, ஐஸ்வர்யா, சோமு என போட்டியாளகள் கலக்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் சுற்று நடைபெற்றது.

5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி – அவரே வெளியிட்ட போட்டோ!

அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு படத்தை எடுத்து அதில் உள்ள பாடலுக்கு படத்தில் வந்த காட்சிகள் போலவே நடனம் ஆட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட பாலாஜி நிஷா ஜோடி நடிகர் விஜய்யின் கில்லி படத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் ஏன் இந்த படத்தை தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் இருவரிடமும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பாலாஜி இதுவரை யாருக்கும் தெரியாத சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் – வெளியான ப்ரோமோ!

அதில், விஜய்யின் ஆரம்ப கால படங்களான பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் விஜய்க்கு நண்பராக பாலாஜி நடித்துள்ளார். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக விஜய் உடனே பல படங்களில் பயணம் செய்துள்ள பாலாஜிக்கு விஜயுடன் நல்ல நட்பு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் என தெரிவித்துள்ளார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,படப்பிடிப்புத் தளத்தில் சோகமாக இருந்த பாலாஜி பார்த்த விஜய் உதவியாளரிடம் என்ன பிரச்சனை என்பதை அறிந்துகொண்டு, பாலாஜியின் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கி உதவி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!