Top 10 National and International Current Affairs in 2025 Tamil – PDF Download
அரசு தேர்வுக்கு தயாராகுபவர்கள் அன்றாடம் நிகழும் சர்வதேச நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், சமீபத்திய நடப்பு நிகழ்வுகளுக்கு என அரசு தேர்வுகளில் மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு கட்டாயம் கேட்கப்படுகின்றன. எனவே, உங்களுக்காக சமீபத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை முழுமையாக படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
What is Current Affairs?
நடப்பு நிகழ்வுகள் என்பது சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் அல்லது சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாகும். மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் பொருளாதார முன்னேற்றங்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், மற்ற நாடுகளின் கலாச்சாரம், விழாக்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உச்சி மாநாடுகள் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளையும் இது குறிக்கும்.
- 2025 டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் படத்தை ஆர். பிரக்ஞானந்தா வென்றார்.
நெதர்லாந்தில் நடைபெற்ற 87 வது டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நடத்திய செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்போட்டியை வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை ஆர். பிரக்ஞானந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- சர்வதேச பெரிய பூனை கூட்டணிக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ‘சர்வதேச பெரிய பூனை கூட்டணி’ இறுதியாக, கடந்த ஜனவரி 23, 2025 ஆம் நாள் அமலுக்கு வந்துள்ளது. இந்த தகவலை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கியுள்ளது. மேலும், புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் இது கொண்டு வரப்பட்டதாகும். அதாவது, புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சிறுத்தை போன்ற ஏழு பெரிய பூனைகளை பாதுகாக்க சர்வதேச பெரிய பூனை கூட்டணி (IBCA ) உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெல்ஜியத்தின் புதிய பிரதமராக பார்ட் டி வெவர் பதவியேற்றார்.
பெல்ஜியம் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பார்ட் டி வெவர் பெல்ஜியத்தின் பிரதமராக கடந்த பிப்ரவரி 3, 2025 அன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா பெல்ஜியத்தின் ப்ரெஸ்சஸ் நகரில் உள்ள அரச மாளிகையில் நடைபெற்றது.
- 67 வது கிராமி விழாவில் சிறந்த புதிய யுக ஆல்பத்திற்கான விருதை சந்திரிகா டாண்டன் பெற்றார்.
2025 ஆம் ஆண்டிற்கான 67 வது கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ‘சிறந்த புதிய யுக ஆல்பத்திற்கான விருது’ இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க இசைக்கலைஞர் “சந்திரிகா டாண்டன்” என்பவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுப்புற மற்றும் சாண்டல் ஆல்பம் பிரிவில் தனது முதல் விருதை இவர் பெற்றார்.
Top 10 Longest Rivers of India in Tamil- Free PDF Download…!!
- ஐ.ஐ.சி மகளிர் யு 19 டி 20 உலக கோப்பை பட்டத்தை இந்தியா வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான
இரண்டாவது யு 19 மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் கடந்த ஜனவரி 19 முதல் பிப்ரவரி
2 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தென்னாப்பிரிக்கா அணியை
ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
பெற்று மகளிர் யு 19 டி 20 உலக கோப்பை பட்டத்தை கைப்பற்றியது . மேலும், கடந்த ஆண்டு இதே பட்டத்தை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
- UNHRC -லிருந்து அமெரிக்கா விலகியது மற்றும் UNRWA -க்கு நிதி அளிப்பதை நிறுத்த அமெரிக்க அதிபர் முடிவு.
அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) லிருந்து அமெரிக்காவை விலகிக் கொள்ளவும், ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணி முகமை (UNRWA) மூலம் பாலஸ்தீன அகதிகளுக்கு அளித்து வந்த நிதியுதவியை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார். மேலும், இவர் இதற்கு முன் பதவியில் இருந்த போதும் UNHRC யில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் நிறுவப்பட்ட சூரிய மின் சக்தி உற்பத்தி திறன் 100 GW மைல் கல்லை தாண்டியது.
இந்தியாவில் சூரிய மின் சக்தி உற்பத்தி திறன் 100.3 GW யை தூண்டியதாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் சூரிய மின் சக்தியின் பங்களிப்பு 47% ஆகும்.
- உலக மருந்தியல் துறையின் 15 வது சர்வதேச கூட்டம் புது டெல்லியில் நடைபெறுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான 15 வது சர்வதேச மருந்தியல் கூட்டம் கடந்த பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடைபெற்றது . இதில், உலகளாவிய மருந்தியல் தலைவர்கள் இணைந்து மருந்தியல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பொது சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் ஒரு புதிய தளத்தை வழங்கினர்.
- ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை: 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக நிர்ணயம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் கீழ் (LAF) ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயித்து அறிவித்துள்ளார். மேலும், RBI யின் நாணய கொள்கைக் குழுவின் பரிந்துரையின் படி குறைத்ததாக தெரிவித்துள்ளார்.
- கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்
இந்தியா – சீனா ஆகிய இருநாட்டு உறவுகளில் ஒரு திருப்புமுனையாக கருதப்படும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் ஒப்புக்கொண்டன. மேலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த யாத்திரை தற்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடங்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
How to remember Daily Current Affairs:
2025 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் இதுவரை நடைபெற்ற முக்கிய நடப்பு விவகாரங்கள் குறித்து மேலே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், இந்த நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ள தினமும் செய்தி தாள்களை படித்து குறிப்பெடுத்து சுருக்கமாக எழுதி வைத்து தேர்வு நேரங்களில் படிக்க வேண்டும். மேலும், நாடுகளின் பெயர்கள், தலைவர்களின் பெயர்கள், நடந்த ஆண்டு போன்ற விவரங்களை தெளிவாக படிக்க வைத்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
Join ExamsDaily Whatsapp Group
Ans: Eden Gardens in Kolkata.
Ans: Nageshwar Reddy, Telangana
Ans: Orbital Book written by Samantha Harvey in English.
Ans: Uttar pradesh introduced for prevention of crime.
Ans: Karnataka for giving financial aid to unemployed graduates.


























