பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!! மாணவர்களுக்கு வந்த குஷியான செய்தி இதோ…!!
பள்ளி மாணவர்கள் மாத தொடக்கத்திலேயே, இந்த மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என்று காலெண்டரை பார்த்து எண்ண தொடங்கி விடுகின்றனர். அதிலும், குறிப்பாக இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கி கணக்கு முடிவு நாள், மகாவீரர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி என ஏராளமான அரசு விடுமுறைகள் அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நிகழும் கோவில் திருவிழாக்கள் காரணமாக, அவ்வப்போது உள்ளூர் விடுமுறைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இனி பேருந்து முன்பதிவு இ -சேவை மையத்திலேயே பண்ணலாம்…!! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு
அந்தவகையில், தற்போது இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (04.04.2025) வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு காரணமாக, நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
























