தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இதில் உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!

0

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இதில் உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் மே மாதம் வெயில் அதிகரிக்கும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர். எதிர்பாராத விதமாக தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர் பரவ தொடங்கியது.  தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Cloud Support Engineer காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இதில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!