இனி பேருந்து முன்பதிவு இ -சேவை மையத்திலேயே பண்ணலாம்…!! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு

0
??? ???????? ????????? ? -???? ??????????? ????????...!! ????????? ???????????? ????? ?????? ?????????
இனி பேருந்து முன்பதிவு இ -சேவை மையத்திலேயே பண்ணலாம்...!! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு

இனி பேருந்து முன்பதிவு இ -சேவை மையத்திலேயே பண்ணலாம்…!! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள், ஏசி பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், இந்த சேவைகளை மக்கள் எளிதாக பயன்படுத்தி கொள்ள, ரயில் முன்பதிவு போலவே, பேருந்துகளிலும் முன்பதிவு செய்யும் முறை  நடைமுறைப்படுத்த பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி.. 2025-2026 பால்வளத்துறை மானியக் கோரிக்கை.. வெளியான சிறப்பு அறிவிப்புகள்..!!

இந்நிலையில், தற்போது “தமிழகத்தில் உள்ள அனைத்து இ -சேவை மையங்களிலும் அரசு பேருந்துகளில் பயணிக்க, டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில், இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை மொபைல் போன் இல்லாத கிராம மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த வருடம் அரசு விரைவு பேருந்துகளில் பயணிகள் UPI மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!