நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை (அக்டோபர் 19) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே போல அக்டோபர். 18 ஆம் தேதி முதல் அக்டோபர். 21 ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























