தமிழகத்தில் இன்று (அக்.1) 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இன்று (அக்.1) 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்திலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 1) கனமழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குடிநீர், கழிவுநீர் வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை..!! ” தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!

மேலும் அக்டோபர் 1 முதல் 6 ஆம் தேதி வரை மிதமான வானிலை நிலவும் என்றும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இன்று (அக்டோபர் 1) முதல் அக்டோபர் 3 வரை தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!