தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும் (செப்டம்பர் 12), நாளையும் (செப்டம்பர் 13) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் த.வெ.க கட்சி மாநாடு அக்டோபருக்கு மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்!!
சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் மேலும் இன்று (செப்டம்பர் 12 ) முதல் வரும் செப்டம்பர் 16ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது .


























