தமிழகத்தில் இன்று மிதமான மழை .! வானிலை மையம் தகவல்..!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தீவிர அடைந்துள்ளது. அதாவது கேரளாவில் கனமழை பெய்து வந்த சூழலில் தமிழகத்திலும், கேரளாவைப் போலவே கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது மற்றும் 2 நாட்களாக தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 6 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.
வங்கி ஊழியர்களின் 5 நாள் ஊதியம் நிவாரணமாகிறது …!! “அரசு உத்தரவு”..!!!
மிதமான மழை பெய்யும் இடங்கள்:
செங்கல்பட்டு ,சேலம் , திருவண்ணாமலை . காஞ்சிபுரம் , திருவாரூர் , நாகை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


























