துணை முதலமைச்சர் பதவி ஏற்கிறாரா உதயநிதி ஸ்டாலின் ?? – இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

0
துணை முதலமைச்சர் பதவி ஏற்கிறாரா உதயநிதி ஸ்டாலின் ?? – இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மு.க ஸ்டாலின் அவர்கள் வரும் 27 ஆம் தேதி அமெரிக்க செல்ல உள்ளார். அப்போது, கூகுள் நிறுவனர் மற்றும் அமெரிக்க தமிழர்களையும் சந்திக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அதற்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா செல்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்கு முன் துணை முதலமைச்சர் யார் என்று அறிவித்து செல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களே அலர்ட்.., நாளை ( ஆக.14) இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!

ஏற்கனவே, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் ஆகலாம் என்ற செய்தி வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், அமைச்சர் ராஜகண்ணப்பன் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை-முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தார். மேலும், இன்று நடக்கும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சரை அறிவிப்பாரா? அமைச்சரவையில் மாற்றம் நிகழுமா என்று மக்கள் எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!