
ஹாப்பி நியூஸ்..புயல் காரணமாக இன்று(30.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! ” தமிழக அரசு உத்தரவு”…!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக நேற்று மாலை வலுப்பெற்ற நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், “ஃபெஞ்சல்” புயல் எதிரொலியாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு கடலூர், மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(30.11.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

























