தமிழகத்தில் இன்று(28.12.2024) லேசான பனிமூட்டம்…!! “சென்னை வானிலை மையம் தகவல்”
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (டிசம்பர் 27) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சில பகுதிகள் இன்றும் (28.12.2024), நாளையும் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



























