
Today Gold Rate: நகை வாங்க செல்லும் மக்களுக்கு இனிப்பான செய்தி…!! ” மீண்டும் இன்று(28.12.2024) தங்கம் விலை சரிவு”…இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க”..!!
இந்திய பெண்களின் மத்தியில் தங்க ஆபரணங்களின் பயன்பாடானது மற்ற நாட்டு பெண்களை காட்டிலும் சற்று அதிகமாகவே உள்ளது. மேலும், உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மட்டுமே வருடத்திற்கு டன் கணக்கில் தங்க கட்டிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நகை வாங்க செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், இன்றைய நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பதை விரிவாக கீழே காண்போம்.
நெல்லையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து, 1 சவரன் 57,080 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,135 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,00,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























