
BREAKING NEWS: மாணவர்களே…இன்று(27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!! ” உங்க மாவட்டமும் இருக்கானு பாத்துக்கோங்க..”
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று “ஃபெங்கல்” புயலாக வலு பெறவுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தொடர் கனமழை எதிரொலியாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், அரியலூர் மற்றும் திண்டுக்கல் முதலிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(27.11.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(27.11.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
























