
Today Petrol Rate: “இது மாறாது போல”…பேஸ்ட் போட்டு ஒட்டியது போல் ஒரே விலையில் பெட்ரோல்….!! “முழு விவரம் உள்ளே”..!!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தினசரி எரிபொருளின் விலையானது மாறி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் கடந்த பல மாதங்களாக வரலாறு காணாத அளவில் ஒரே நிலையான விலையில் மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 1 வாரமாக பைசா கணக்கில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 90 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 49 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மக்களிடம் விற்பனையாகி வருகிறது.
























