இந்திய பங்கு சந்தையின் நிதி திரட்டல்…!! ” ஹூண்டாய் நிறுவனம் திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா”..??
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் தினசரி கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தற்போது நடப்பாண்டின் பொதுப்பங்கை இந்திய பங்கு சந்தை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய பொதுப்பங்கு (IPO) எனப்படுவது பங்குசந்தையில் தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்களிடம் இருந்து பங்கு நிதியை பெற, அவர்களின் பங்குகளை மக்களிடம் விற்பனை செய்து நிதியை திரட்டுவது ஆகும். அந்த வகையில், இன்றைய IPO நிலவரத்தில் இதுவரை ரூ. 1.91 லட்சம் கோடி நிதியை நிறுவனங்கள் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 27, 870 கோடி நிதியை திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, உலகளவில் அதிக நிதி திரட்டிய பங்குசந்தைகள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும் மற்றும் 3வது இடத்தில் சீனாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



























