
Today Vegetable Price: சென்னை கோயம்பேட்டில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை..!! ” பீட்ரூட், உருளைக்கிழங்கு கிலோ எவ்வளவு தெரியுமா”…?
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மேலும், தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பெரிதளவில் பாதித்துள்ளன. அந்த வகையில், நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்று எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது என்பதை கீழே விரிவாக காண்போம்.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 1 கிலோ தக்காளியின் விலை 56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1 கிலோ தக்காளி 51 ரூபாயாக மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், 1 கிலோ சின்ன வெங்காயம் 67 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 54 ரூபாய், பீட்ரூட் 50 ரூபாய், உருளைக்கிழங்கு 46 ரூபாய், அவரைக்காய் 44 ரூபாய், முட்டைக்கோஸ் 35 ரூபாய், கேரட் 48 ரூபாய், முருங்கைக்காய் 110 ரூபாய், கத்தரிக்காய் 35 ரூபாய், பீன்ஸ் 56 ரூபாய், பூண்டு 333 மற்றும் இஞ்சி 66 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























