
இன்னும் சில மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும்..!! “இந்திய வானிலை மையம் எச்சரிக்கை”..!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடந்த 2 தினங்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் அடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், சில மாவட்டங்களில் விடாமல் தொடர்ந்து லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் , இது அடுத்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 11ம் தேதி காலையில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


























