எட்டாத உயரத்தில் தங்கம் விலை – இனி வரும் காலங்களில் நகை வாங்க முடியுமா?

0
எட்டாத உயரத்தில் தங்கம் விலை – இனி வரும் காலங்களில் நகை வாங்க முடியுமா?

நிர்மலா சீதாராமன் செய்த பட்ஜெட் எதிரொலி காரணமாக குறைந்து வந்த தங்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. வரும் தீபாவளி, திருமண நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களுக்கு நகைக் கடைகளுக்கு சென்று நகை வாங்க நினைத்த மக்களுக்கு இந்த நகை உயர்வு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது எனலாம்.

மக்களே அலர்ட்.., நாளை ( ஆக.14) இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!

இதைத்தொடர்ந்து, மதுரையில் நேற்று 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராமிற்கு 6,430 ரூபாயும், ஒரு சவரனுக்கு 51,760 ரூபாயும் உயர்ந்து இருந்தது. இப்போது மீண்டும் ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 6,565 ரூபாய்க்கும், ஒரு சவரன் 52,520 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு தினமும் பல மடங்கு உயரும் தங்கத்தின் விலை மீண்டும் குறைவது கடினமான ஒன்று என சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும், வெள்ளி ஒரு கிராம் 88.50 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 88,500 ரூபாய்க்கும் இன்று விற்பனையாக உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!