இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – உஷார் மக்களே!

0
இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - உஷார் மக்களே!
இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - உஷார் மக்களே!
இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – உஷார் மக்களே!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தின் படி ஒரு சில இடங்களில் மட்டும் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை நாமக்கல் மாவட்டத்தில் 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக உள் மாவட்டங்கள், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

புதிய மின் இணைப்பு பெற வேண்டுமா? உங்களுக்கு தான் இது கவனிங்க!

மேலும் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை காரணமாக மக்கள் அசௌகரிய நிலையை உணரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர நாளை தமிழக கடலோரப் பகுதியான குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!