காசியில் மகா கும்பமேளா இன்றுடன் கோலாகல நிறைவு…!! அடுத்து 2169 ஆம் ஆண்டில் நடைபெறும் என தகவல்…!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. மேலும், மொத்தம் 44 நாட்கள் நடைபெற்ற காசி மகா கும்பமேளா நிகழ்ச்சி கடைசி நாளான இன்றுடன் கோலாகலமாக நிறைவடைய உள்ளது. மேலும், இந்த மாபெரும் ஆன்மீக திருவிழாவிற்கு உலகெங்கும் இருந்து 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதையடுத்து, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், ஆளுநர், நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பலரும் கலந்து கொண்டு புனித நீராடினர்.
அதன்படி, திருவிழாவின் கடைசி நாளான இன்று லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதால் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புனித நீராட வரும் பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க திரிவேணி சங்கமத்தை சுற்றி 12 கி.மீ தூரத்திற்கு காவல் துறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்து வருகின்ற 2169 ஆம் ஆண்டு தான் மீண்டும் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


























