
12 வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு…!! தமிழ் பொது தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது எப்படி..?? இதோ உங்களுக்காக…
தமிழ்நாட்டில் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் தேர்வான தமிழ் தேர்வில் மாணவர்கள் எந்தெந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, 12 ஆம் வகுப்பு தமிழில் மொத்தம் 11 மனப்பாட பாடல்கள் மற்றும் 20 மனப்பாட திருக்குறள்கள் உள்ளன. எனவே, இதனை நன்றாக படித்து எழுத்துப் பிழை இல்லாமல் எழுதியும் பார்க்க வேண்டும்.
திடீரென ஸ்லீப்பர் வகுப்பை போல மாறி வரும் ஏசி வகுப்பு.. !! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
மேலும், தமிழ் தேர்வில் திருக்குறள் பகுதிகளில் இருந்து மட்டுமே ஆண்டுதோறும் மொத்தம் 20 மதிப்பெண்கள் கேட்கப்படும். அதேபோல், திருக்குறள் பகுதியில் அணி மற்றும் இடம் சுட்டி பொருள் விளக்குக போன்ற கேள்விகளும் கட்டாயம் கேட்கப்படுகின்றன. எனவே, திருக்குறள் பகுதியை தவிர்க்காமல் படிக்க வேண்டும். மேலும், உரைநடை மற்றும் துணைப்பாட பகுதிகளில் முதல் 5 பாடங்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இவற்றில் இருந்து நிச்சயம் 2 கேள்விகள் இடம்பெறும். மேலும், குறிப்பாக தமிழில் நூற்றுக்கு நூறு பெற நினைக்கும் மாணவர்கள் மொழித்திறன் பகுதிகளை கட்டாயம் படிக்க வேண்டும்.
























