
Today Gold Rate: மீண்டும் மீண்டுமா..மதுரையில் வச்சு செய்யும் தங்கம் விலை…!! அதிரடியாக உயர்ந்ததால் அதிர்ச்சியில் மக்கள்”..!!
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது, கடந்த ஒரு வாரமாக அதிரடியாக சரிய தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை வாங்க செல்வோர் மத்தியில் இது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேற்றைய விலையை ஒப்பிடும்போது இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு என்பதை கீழே விரிவாக காண்போம்.
மதுரையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, 1 சவரன் 57,280 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,160 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,00,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























