ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்த தங்கத்தின் விலை – ஆச்சர்யத்தில் நகைப்பிரியர்கள்!
ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் ஆயிரம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் தினசரி நிகழ்வாக இருந்து வரும் போதிலும ஒரு சில நாட்களில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அதிரடியாக விலை குறைவு அதிக அளவில் மக்களை ஆச்சரியப்படுத்தி விடும். அந்த வகையில் நேற்றைய விலையை விட ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 1000 விலை குறைந்து உள்ளது.
தமிழகத்தில் காய்கறி விலை நிலவரம் என்ன? – இன்றைய ரிப்போர்ட்!
22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூபாய் 46,800 க்கும், ஒரு கிராம் ரூபாய் 5250-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தூய 24 கேரட் தங்கத்தின் விலை ஆனது ஒரு சவரன் ரூபாய் 50,560 க்கும், ஒரு கிராம் ₹6,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 81.40 பைசாவிற்கும், ஒரு கிலோ 81,400ககும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.