ஆதார் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை பதிவு இதோ!
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும்.
UMANG ஆப் மூலம் பணம் எடுக்க முடியும் தெரியுமா? முழு விவரங்களுடன்!
உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய uidai.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் ஆதார் எண், Captcha, OTP யை பதிவிட்டு உள்நுழையவும். Authentication History -யை கிளிக் செய்து அதில் All என்பதை தேர்ந்தெடுத்து Fetch Authentication History – கிளிக் செய்தால் ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் கிடைக்கும். உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தால் 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

























