2026 IPL தொடருக்கு ரெடியாகும் ‘தல’.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள் ..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதன் காரணமாக நடப்பாண்டிற்கான IPL தொடரானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதையடுத்து IPL போட்டிகள் மீண்டும் இன்று (17-05-2025) முதல் தொடங்க இருப்பதாக BCCI தெரிவித்தது. மேலும், நடப்பாண்டிற்கான IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அதாவது, விளையாடிய 12 போட்டிகளில் 3 மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இது குறித்து கொல்கத்தா – சென்னை அணி மோதி கொண்ட போட்டியின் போது தோனியிடம் கேட்கையில் “தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என தெரிவித்த தோனி, எங்கு சென்றாலும் தனக்கு அன்பு கிடைப்பதை உணர முடிகிறது எனக்கூறிய அவர் தனக்கு 43 வயதாகிறது என்பதை மறக்க முடியாது என்றும், என்றார். இதை தொடர்ந்து, தற்சமயம் 2026 ஆம் ஆண்டுக்காக சென்னை அணியை தயார் செய்வதில் தான் தனது கவனம் இருப்பதாகவும் கூறினார்”. இந்நிலையில் “ஓய்வு குறித்து சென்னை அணி நிர்வாகத்திற்கு தோனி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும், இதனால் அடுத்த ஆண்டு IPL தொடரிலும் அவர் விளையாடுவார்” எனவும் கூறப்படுகிறது.

























