தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான CV-PMT-ET-PET தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி:
தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் டிசம்பர் 10 ஆம் தேதி TNUSRB Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen போன்ற பதவிகளில் காலியாக இருக்கும் 3359 காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அடுத்தகட்டமாக உடல்திறன் தேர்வு நடைபெற உள்ளது.
அதன் படி அடுத்த கட்ட ஆட்சேர்ப்புக்கான உடல்திறன் தகுதி தேர்வுகள் தற்காலிகமாக 06.02.2024 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.