TNRD வேலை அறிவிப்பு 2020 !
விருதுநகர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 16.10.2020 நாளை இறுதி நாளாகும். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.10.2020 நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனம் | விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி |
பணியின் பெயர் | கிராம ஊராட்சி செயலர் (Panchayat Secretary) |
பணியிடங்கள் | 16 |
கடைசி தேதி | 16.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள் :
விருதுநகர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது தளர்வுகளை பற்றி அறிய அறிவிப்பினை அணுகவும்.
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Merit list & Interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
???????? ??????????? ??? ?????? ???