TNPSC தேர்வு குறித்த முக்கிய தகவல் – அதிகாரப்பூர்வ வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான தேர்வுக்கான வாய்வழி தேர்வு பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
முக்கிய தகவல் வெளியீடு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 15ஆம் தேதியன்று கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வுக்கான வாய்வழி தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு சேவையில் சேர்க்கப்பட்டுள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 1:3 என்ற விகிதத்தில் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் ஆனது முன்னதாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இதோ எளிய வழி!
வாய்மொழி தேர்வுகள் நவம்பர் 22 முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி சாலை, சென்னை 60003. அலுவலக முகவரியில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வாய்மொழி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது குறித்த அதிக தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.