AIIA ஆயுர்வேத மருத்துவமனையில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!
Medical Officer, Pharmacist போன்ற பல்வேறு பணிகளுக்கு என All India Institute of Ayurveda (AIIA) மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | All India Institute of Ayurveda (AIIA) |
பணியின் பெயர் | Medical Officer, Pharmacist |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk in Interview |
AIIA காலிப்பணியிடங்கள்:
Medical Officer பணிக்கு என 02 பணியிடங்களும், Pharmacist பணிக்கு என 01 பணியிடமும் AIIA மருத்துவமனையில் காலியாக உள்ளது.
Medical Officer / Pharmacist கல்வி:
இந்த AIIA மருத்துவமனை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Medical Officer – MD / MS
- Pharmacist – B.Pharma
Medical Officer / Pharmacist வயது:
- Medical Officer பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
- Pharmacist பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DIC Content Writer வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!
Medical Officer / Pharmacist சம்பளம்:
- Medical Officer பணிக்கு ரூ.1,00,000/- என்றும்,
- Pharmacist பணிக்கு ரூ.30,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
AIIA தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 22.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
AIIA விண்ணப்பிக்கும் விதம்:
இந்த AIIA மருத்துவமனை சார்ந்த பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து 22.11.2023 அன்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.