TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கியத் தகவல் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) பல்வேறு துணைப் பணித் தேர்வு 2023 இல் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளருக்கான தேர்வின் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு:
TNPSC தமிழ்நாடு நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் துணை சேவையில் புள்ளியியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான 6 காலியிடங்களை முன்னதாக வெளியிட்டு, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) நடத்தியது. தற்போது அதிகாரப்பூர்வ தலத்தில் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வர்கள் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு துணைப் பணிகளில் (நேர்காணல் பதவிகள்) ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கு 1:4 என்ற விகிதத்தில் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்படிக்கிறார்கள். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிக விவரங்களை TNPSC தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
OFFICIAL NOTICE
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இதோ எளிய வழி!