தீபாவளியை தொடர்ந்து மீண்டும் அரசு விடுமுறை – மாணவர்கள் குஷி!!
தமிழகத்தில் தற்போது தான் தீபாவளி பண்டிகை முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து அரசு விடுமுறை வரவுள்ளது.
அரசு விடுமுறை:
தமிழகத்தில் ஆயுத பூஜைக்கு பிறகு ஏகப்பட்ட அரசு விடுமுறை வந்தபடியே இருந்து வருகிறது. அதாவது, ஆயுத பூஜைக்கு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாதத்தை போல அடுத்த மாதமும் தொடர்ந்து கிறித்துமஸ் பண்டிகைக்கு அரசு விடுமுறை காத்திருக்கிறது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கியத் தகவல் வெளியீடு!
இதற்கிடையில், கனமழையின் காரணத்தினால் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இன்னும் ஒரிரு நாட்களில் அரையாண்டு தேர்வுக்கான பட்டியலும் வெளியாக இருப்பதால் அரையாண்டு விடுமுறையும் கிடைக்கும். எனவே இந்த வருடம் முடிவதற்குள் மாணவர்களுக்கு இன்னும் ஏராளமான விடுமுறைகள் இருக்கிறது.