TNPSC JSO 2023 நேர்காணல் தேதி வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
TNPSC JSO 2023 நேர்காணல் தேதி வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

2023 – 2024 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Junior Scientific Officer பணிக்கான நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இதை பெறுவதற்கான எளிய வழிமுறை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC JSO நேர்காணல்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Junior Scientific Officer பணிக்கான 31 காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 27.04.2023 அன்று வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் 26.05.2023 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட்டு எழுத்து தேர்வானது 23.07.2023 அன்று Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் 13.10.2023 அன்று வெளியிடப்பட்டது.

ரூ.30 ஆயிரம் பைக்குக்கு 3 லட்சம் ஃபைன் – விதிமீறியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்த எழுத்து தேர்வு மூலம் 1:2 / 1:3 என்ற அளவின் படி தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணல் (Oral Test) 22.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.சி சாலை, சென்னை- 600 003 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட 65 நபர்களின் பதிவெண் பட்டியலானது 10.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!