TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 – CV அழைப்பு கடிதம் வெளியீடு!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 - CV அழைப்பு கடிதம் வெளியீடு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 - CV அழைப்பு கடிதம் வெளியீடு!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 – CV அழைப்பு கடிதம் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC Group III A தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Group III A அழைப்புக் கடிதம்:

தமிழக கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர் நிலை – II ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான TNPSC Group III A தேர்வு குறித்த அறிவிப்பானது 15.09.2022 அன்று TNPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வானது 28.01.2023 அன்று நடத்தப்பட்டு முடிவுகளும் 31.08.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாரா? அதிரடி ஆஃபர் விலையில் பயிற்சி வகுப்பு!! 

இந்த TNPSC Group III A எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தை https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது 08.01.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை, சென்னை – 600 003 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ,மின்னஞ்சல் மூலம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.

Download Notification Link
Download Admit Card Link
Official Website Link         

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!