TNPSC Group II இரண்டாம் கட்ட நேர்காணல் – பட்டியல் / தேதி வெளியீடு!

0
TNPSC Group II இரண்டாம் கட்ட நேர்காணல் - பட்டியல் / தேதி வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) Group II பதவிகளுக்கான இரண்டாம் கட்ட நேர்காணல் (Phase II Oral Test) நடைபெறும் தேதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பதிவெண் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group II நேர்காணல்:

TNPSC தேர்வாணையத்தால் குரூப் 2, 2ஏ பிரிவின் கீழ்வரும் 5529 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இக்காலியிடங்களுக்கான TNPSC Group II முதல் நிலை தேர்வானது 09.11.2022 அன்றும், முதன்மை தேர்வானது 25.02.2023 அன்றும் நடைபெற்றது. பிறகு முதல் நிலை தேர்வின் முடிவுகள் 11.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து குரூப் II பதவிகளுக்கான முதற் கட்ட நேர்காணல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையும் கலந்தாய்வானது 21ம் தேதி அன்று நடைபெற்றது.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.85,090/- || நேர்காணல் மட்டுமே!

இந்நிலையில் முதற் கட்ட நேர்காணல் மூலம் Special Branch Assistant பதவிக்கான 47 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது. எனவே இப்பணிகளுக்கு 25.02.2023 அன்று நடைபெற்ற முதன்மை தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் 1:2 / 1:3 என்ற விகிதப்படி இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு (Phase II Oral Test) தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியாலானது இன்று (27.02.2024) https://www.tnpsc.gov.in/ என்ற வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 05.03.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், TNPSC சாலை, சென்னை – 600 003 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணல் குறித்த தகவல் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!